அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த என்.எம்.எம். எஸ் தேர்வுக்கான பயிற்சி நிறைவு விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த என்.எம்.எம். எஸ் தேர்வுக்கான பயிற்சி நிறைவு விழா


அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த என்.எம்.எம். எஸ் தேர்வுக்கான பயிற்சி நிறைவு விழா.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர்நாடு பகுதிகளில் உள்ள ஒன்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடந்து வந்த பயிற்சி வகுப்பானது கோனூர் நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோணநாடு மக்கள் வளர்ச்சியை அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டு வந்தது .

எதிர் வருகிற ஜனவரி 10ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளதால் இன்று அதனுடைய நிறைவு விழா அரசு மேல்நிலைப்பள்ளி, தெக்கூரில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் அனுபவமுள்ள சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 



மேலும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு மற்றும் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது. கோனூர்நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் திரு.ஆர். தங்கராஜ் அவர் தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது விழாவில் கோனூர்நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோனூர்நாடு மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை சேர்ந்த பொறுப்பாளர்கள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Powered by Blogger.