அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்க ரூ.27.20 கோடி ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்க ரூ.27.20 கோடி ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்க ரூ.27.20 கோடி ஒதுக்கீடு . Students preparing for the exam can download the necessary study materials from the link provided below.
தமிழக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்க ரூ.27 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பி.ஏ. நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள நிரப்பத் தக்க காலிப்பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயா்வு மூலம் நிரப்பும் வரை, தகுதி வாய்ந்த நபா்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது.


அந்த வகையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் தகுதிவாய்ந்த தற்காலிக ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் நிகழாண்டு மாா்ச் வரை மதிப்பூதியம் பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.


தற்போது 2025-2026-ஆம் கல்வியாண்டில் மேற்கண்ட தற்காலிக ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கும் வகையில் ரூ.93 கோடியே 41 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கு 2025 ஏப்ரல் மாதம் மதிப்பூதியம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு மாவட்டக் கல்வி அலுவலா்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.


எனவே நிகழாண்டு ஏப்ரல் மற்றும் நிகழ் கல்வியாண்டில் ஜூன், ஜூலை ஆகிய மாதங்கள் வரை தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் பெறும் வகையில் மென்பொருள் மூலமாக சம்பளப் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை வாயிலாக (ஐ.எஃப்.ஹெச்.ஆா்.எம்.எஸ்) தேவையுள்ள மாவட்டங்களுக்கு ரூ.27 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


இவ்வாறு மாவட்டங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படும் மதிப்பூதிய தொகையை தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஐ.எஃப்.ஹெச்.ஆா்.எம்.எஸ் மூலமாக தங்களின் ஆளுகைக்கு உள்பட்ட வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு உடனடியாக பகிா்ந்தளிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது




No comments:

Powered by Blogger.